காதல் ஏக்கம்பாவை
உன் மீது
கொண்டேன்   
பாங்காய்
காதல் ஏக்கம்


பாழாய்
போனது
பாவி என்
பலநாள்
 இரவு தூக்கம்


 வஞ்சி
உன்னை
அடைவதே
வாலிபன்  
என்
வலிய நோக்கம்


கொஞ்சிப்
 பேசி
கொடுத்திடு
 குறைவிலா ஊக்கம்

தத்தை 
உன் செயலால்
தணிந்திடுமே
காதல் காய்ச்சலின்
தாக்கம்...

சோம்பல் சுந்தரி...சோம்பல் முறிக்கும்
சுந்தரி 
உன் அழகு….

சொக்கிப் போனேன்
 சொல்ல இல்லை 
ஒரு அளவு…

தத்தை நீ
தடையில்லாமல்
நடத்திடும்
தொடர் காதல் களவு…

தடுக்க விரும்பாமல்
தவிக்குது
 என் மன உளவு…

எழில் அழகி நீ
எப்போதும்
என்னைச் சுற்றி
வட்டமிடும்
 காதல் கழுகு…

ஏடாகூடம் ஏதும்
 ஆகிடாமல் இருக்க
எட்டி இருந்தே
 எதற்கும்  பழகு…


காதல் மனம்காய்க்கும்  மரம்
கல்லடி  படும்…

காதலிக்கும்  மனம்
சொல்லடி படும்...

கல்லடி படும்  மரம்
பல கனி கொடுக்கும்...

சொல்லடி படும் மனம்
நல் கவி கொடுக்கும்...

மரம் படும்பாடு
மனம்  அறியும்...

காதல் மனம் பாடும்  பாடல்
பல மனிதர்  அறியாரே…

மச்சக்காரி...உனக்கே தெரியாமல்
ஒளிந்து இருக்கிறது
உன் உடம்பில்
 எததனையோ மச்சம்…

அங்கெல்லாம்  
 ஒட்டிக் கிடக்கிறது
ஏழை என்
 உயிரின் எச்சம்…

----------------------------------------

அன்பிற்கும் உண்டோ
அடைக்கும் தாழ்...

அறிந்த என் மனம்
பண்ணத்துடிக்குது
உன்  இதழ் கதவை பாழ்….