சாட்சி!

சிந்தை நிறைத்து
வாலிபம் ஊடுருவும்
கருவ‌றையின்
பெருஞ்சுவரில்

மோதி,மோதியென்
குருதி இழக்கிறேன்.
இன்னதென‌ச் சொல்ல‌
முடியா வண்ணத்தில்
இருந்ததென் குருதி.

சுவரைக் குருதியின்
நிறம் கவரத்
தொடங்கிய கணத்தின்
முடிவில்,

என்னுள் நீயில்லை.

உன்னை அழைத்துச்
செல்ல,அவ்வறை
நோக்கி வந்த
காற்றுக்கு சாட்சியாய்
சிறகடிக்ககிறது,
படுக்கையில் உதிர்ந்த
உன்
ஒற்றைக் குழல்.

-♠ராஜூ♠
5 Responses
  1. சூப்பர் கவிதை.....ஹி ஹி ஏதோ உள்குத்து இருந்தா மாதிரியும் இருக்கு ஹி ஹி....



  2. rajamelaiyur Says:

    //
    சுவரைக் குருதியின்
    நிறம் கவரத்
    தொடங்கிய கணத்தின்
    முடிவில்,

    என்னுள் நீயில்லை.
    //
    super


  3. வாழ்த்துகள்.அசத்தலான கவிதை.


  4. இன்சல்வென்ட்!

    இருவரும் ஒருவராக இருந்தோம்.
    இனி இனிமைதான் என்று இருந்தோம்.

    இன்ன இடங்கள் என்றில்லாமல்
    எல்லா இடங்களுக்கும் போனோம்.

    இல்லாததைக் கேட்டாள்.
    இருந்தாலும் தேடி வாங்கித் தந்தேன்.
    கண் மூடிய காதலுக்காக
    கண்மூடித்தனமாக கடன் வாங்கினேன்.

    பூ வாங்கித் தந்தேன்..
    பொட்டு வாங்கித் தந்தேன்..
    பிட்சா, பர்கர் வாங்கித் தந்தேன்.
    ஐஸ் கிரீம் வாங்கித் தந்தேன்.
    ஆனால் அவள் மனதை..?

    ஒரு நாள் சொல்லிக் கொள்ளாமல்
    அவள் காணவில்லை.
    அயல்நாட்டு அத்தை மகனுக்கும்
    அவளுக்கும் நிச்சயதார்த்தமாம்!

    இப்போது இன்சல்வென்ட்!