காதல் கரிசனம்
நீ வெட்கப்பட்டு பார்த்தால்
நான் தூக்கம் கெட்டு போகிறேன்…
நீ ஓரக்கண்ணால் பார்த்தால்
நான் நேரம் மறந்து நிற்கிறேன்…
நீ கடைக்கண்ணால் பார்த்தால்
நான் விடை தெரியாமல் திரிகிறேன்...
கண்பிரியம் காட்டிடும் பெண்ணே
திண்மனம் நெகிழ்ந்து
காதல்கருணையோடு வேண்டும்
கொஞ்சம் கரிசனம்...
முகம் காட்ட மறுக்காமல்
முன்வந்து தந்திடு
உன் முழு தரிசனம்...
கன்னி உனைக்கண்டால் அனுதினம்
அடைந்திடும் அமைதி என்மனம்.
மனம் அமைதியாகிறதா?,,,,,,,,,,,,,,