சோம்பல் சுந்தரி...



சோம்பல் முறிக்கும்
சுந்தரி 
உன் அழகு….

சொக்கிப் போனேன்
 சொல்ல இல்லை 
ஒரு அளவு…

தத்தை நீ
தடையில்லாமல்
நடத்திடும்
தொடர் காதல் களவு…

தடுக்க விரும்பாமல்
தவிக்குது
 என் மன உளவு…

எழில் அழகி நீ
எப்போதும்
என்னைச் சுற்றி
வட்டமிடும்
 காதல் கழுகு…

ஏடாகூடம் ஏதும்
 ஆகிடாமல் இருக்க
எட்டி இருந்தே
 எதற்கும்  பழகு…


0 Responses