நம்ம வீட்டு கல்யாணத்தில் சந்திப்போம்...
1:43 PM
by துபாய் ராஜா
பதிவுலக பண்பாளரும், பாசத்தில் சிறந்தவரும், பழக்கத்தில் குணம் நிறைந்தவருமான
உயர்திரு.அ.ரா.சங்கரலிங்கம் அவர்கள் இல்லத்திருமணம் 25.04.2012 புதன்கிழமை, திருநெல்வேலி
செல்வி மஹாலில் வைத்து நடைபெற உள்ளது. ஏற்கனவே அவரது வலைப்பூவிலும் திருமண அழைப்பிதழை
இட்டுள்ளார். பதிவுலக சொந்தங்கள் பலரும் வருகை தர உள்ளனர். நெல்லையின் மிகப்பெரிய பதிவர்
சந்திப்பாகவும் இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. திருமணத்தில் கலந்து கொள்வதற்காக
நாளை இரவு சிங்கப்பூரில் இருந்து கிளம்புகிறேன். 20.04.2012 வெள்ளி முதல்
28.04.2012 சனிக்கிழமை வரை நெல்லையில்தான்
இருப்பேன். திருமணத்திற்கு வருகை தரும் நண்பர்கள் 0091-94891 53344 என்ற எண்ணில் எப்போது
வேண்டுமானாலும் என்னை அழைக்கலாம். வாருங்கள் நண்பர்களே…. நம்ம வீட்டு கல்யாணத்தில்
சந்திப்போம்.
நன்றி.வணக்கம்.
சாட்சி!
10:00 AM
by Raju
சிந்தை நிறைத்து
வாலிபம் ஊடுருவும்
கருவறையின்
பெருஞ்சுவரில்
மோதி,மோதியென்
குருதி இழக்கிறேன்.
இன்னதெனச் சொல்ல
முடியா வண்ணத்தில்
இருந்ததென் குருதி.
சுவரைக் குருதியின்
நிறம் கவரத்
தொடங்கிய கணத்தின்
முடிவில்,
என்னுள் நீயில்லை.
உன்னை அழைத்துச்
செல்ல,அவ்வறை
நோக்கி வந்த
காற்றுக்கு சாட்சியாய்
சிறகடிக்ககிறது,
படுக்கையில் உதிர்ந்த
உன்
ஒற்றைக் குழல்.
வாலிபம் ஊடுருவும்
கருவறையின்
பெருஞ்சுவரில்
மோதி,மோதியென்
குருதி இழக்கிறேன்.
இன்னதெனச் சொல்ல
முடியா வண்ணத்தில்
இருந்ததென் குருதி.
சுவரைக் குருதியின்
நிறம் கவரத்
தொடங்கிய கணத்தின்
முடிவில்,
என்னுள் நீயில்லை.
உன்னை அழைத்துச்
செல்ல,அவ்வறை
நோக்கி வந்த
காற்றுக்கு சாட்சியாய்
சிறகடிக்ககிறது,
படுக்கையில் உதிர்ந்த
உன்
ஒற்றைக் குழல்.
-♠ராஜூ♠
முத்தப் பிசுபிசுப்பு..
10:37 AM
by Raju
இலக்கையடைந்த கப்பலின்
நங்கூரப் பாய்ச்சலினுடைய
அதிர்வுகள் கடலினுள்ளிருந்து
மேலேறி ஒலிக்கும் வெளியில்,
மிதந்து வந்தது அன்றவள்
அனுப்பிய முத்தமொன்று.
இராஜாளிப் பறவையின்
அலகையொத்தென்
அதரங்கள் குவித்து
நான் அனுப்பிய முத்தத்தின்
பயணம் அமைந்ததுமதை
நோக்கியே.
இவ்விரண்டும் இணைந்த
தருவாயில், ஆகாயம்
கிழிந்து பொழிந்தது
ஆலங்கட்டி மழை.
மழையின் வாசமடங்கிய
பிறகான வளியில்,
இன்னமும்
முத்த எச்சிலின் நெடி
கலந்த பிசுபிசுப்பானது
காதலாய்
கனந்து கொண்டிருக்கிறது.
நங்கூரப் பாய்ச்சலினுடைய
அதிர்வுகள் கடலினுள்ளிருந்து
மேலேறி ஒலிக்கும் வெளியில்,
மிதந்து வந்தது அன்றவள்
அனுப்பிய முத்தமொன்று.
இராஜாளிப் பறவையின்
அலகையொத்தென்
அதரங்கள் குவித்து
நான் அனுப்பிய முத்தத்தின்
பயணம் அமைந்ததுமதை
நோக்கியே.
இவ்விரண்டும் இணைந்த
தருவாயில், ஆகாயம்
கிழிந்து பொழிந்தது
ஆலங்கட்டி மழை.
மழையின் வாசமடங்கிய
பிறகான வளியில்,
இன்னமும்
முத்த எச்சிலின் நெடி
கலந்த பிசுபிசுப்பானது
காதலாய்
கனந்து கொண்டிருக்கிறது.
-♠ராஜூ♠
துளியில் சிதறிய முகம்!
10:14 AM
by Raju
வானமுடைந்துத் தெறித்த திரவத்
துகள்களென் தலை தொட,
கேசம் விட்டு நாசி நுனி வந்த
துளியொன்று நிலம் நனைத்த
நாளில்தான் மறைந்து போனாளவள்!
கண்ணுயர்த்தி நிமிர்ந்த போது,முகம்
தொட்டுச் சிதறியதோர் துளியில்
அவளின் முகம்!
இப்போது நிலம் விழுந்த துளி,
நில நாக்கை உவர்க்கச் செய்திருக்கலாம்.
துகள்களென் தலை தொட,
கேசம் விட்டு நாசி நுனி வந்த
துளியொன்று நிலம் நனைத்த
நாளில்தான் மறைந்து போனாளவள்!
கண்ணுயர்த்தி நிமிர்ந்த போது,முகம்
தொட்டுச் சிதறியதோர் துளியில்
அவளின் முகம்!
இப்போது நிலம் விழுந்த துளி,
நில நாக்கை உவர்க்கச் செய்திருக்கலாம்.
-♠ராஜூ♠
உறைந்த கடிதம்..
12:23 PM
by Raju
துயிலில்லா இரவுகள்,
புறங்கை தாங்கிய
முகவாய்களுடன்
நீள்கின்றன.
நகம் கடித்தலிலும்
பொழுதுகள் கழியத்தான்
செய்கின்றன.
மௌனம் களைந்து..
உனக்கான எழுத்துகளை,
பேனாவிலென் ரத்தம் ஊற்றி
மேகங்களின் உடலில்
எழுத முயல்கிறேன்.
பேனாவினுள் அதுவும்
உறைந்து நிற்கிறது.
என் காதலைப் போலவே..!
கூடவே கடிதமும்.
புறங்கை தாங்கிய
முகவாய்களுடன்
நீள்கின்றன.
நகம் கடித்தலிலும்
பொழுதுகள் கழியத்தான்
செய்கின்றன.
மௌனம் களைந்து..
உனக்கான எழுத்துகளை,
பேனாவிலென் ரத்தம் ஊற்றி
மேகங்களின் உடலில்
எழுத முயல்கிறேன்.
பேனாவினுள் அதுவும்
உறைந்து நிற்கிறது.
என் காதலைப் போலவே..!
கூடவே கடிதமும்.
-♠ராஜூ♠
Subscribe to:
Posts (Atom)

