காதலிக்க கற்றுக்கொடுடி!!
புத்தகத்தில் எழுதியிருந்த
என் பெயரின் முன்னால்
உன் பெயரை எழுதி
காதலை சொன்னாயே !!
அந்த நுணுக்கத்தை...
ஊரெல்லாம்
வாயாடி என
பெயரெடுத்து விட்டு
என் தாயிடம் மட்டும்
நல்ல பெண் ஆனாயே !!
அந்த வித்தையை...
உன் வீட்டில்
எல்லாரும் இருக்கையிலும்,
பயப்படாமல் என்னையே
பார்த்துக் கொண்டிருப்பாயே !!
அந்த தைரியத்தை...
என்னோடு வருவதற்காகவே
உன் சைக்கிளை
பஞ்சர் செய்வாயே !!
அந்த திருட்டுத்தனத்தை..
உன் அப்பாவோடு நான்
பேசி கொண்டிருக்கையில்
அவருக்கு பின்னால் நின்று
உதடு குவித்து கொஞ்சுவாயே!!
அந்த குறும்பை..
உனக்கு பிடித்த மஞ்சளை தவிர்த்து
எனக்கு பிடித்த நீலத்திலேயே
அதிகம் உடுத்துகிறாயே!!
அந்த ஆசையை ...
என் வீட்டு பூனைக்குட்டி
உன்னிடம் மட்டும்
அதிகம் ஒட்டிக் கொள்கிறதே!!
அந்த விந்தையை...
என்னோடு எதற்கோ
சண்டை போட்டு,
இரவு முழுக்க அழுது விட்டு,
அடுத்த நாள் காலையில்
சிவந்த கண்களோடு 'சாரிடா' என்றாயே !!
அந்த அன்பை..
நான் சாப்பிடும் போது
யாருக்கும் தெரியாமல்
ஒடி வந்து, என்னை
ஊட்டி விட சொல்வாயே !!
அந்த பிரியத்தை..
எனக்கு
உடம்பு சரியில்லாத போது
இரண்டு நாள் முழுதும்
சாப்பிடாமல் இருந்தாயே!!
அந்த பாசத்தை..
எனக்கும் கொஞ்சம்
சொல்லிக்கொடடி கண்ணம்மா..
நானும்
காதலிக்க கற்றுக்கொள்கிறேன்..
காதலுடன்,
அருமை. அட்டகாச கவிதை
நல்ல கவிதை லோகு!!!!!!
நல்லாருக்கு நண்பா...!
அருமை.அருமை.அனுபவித்தவர்களுக்கு புரியும் இதன் பெருமை.
மிகவும் ரசித்த வரிகள்.
//ஊரெல்லாம்
வாயாடி என
பெயரெடுத்து விட்டு
என் தாயிடம் மட்டும்
நல்ல பெண் ஆனாயே !!
அந்த வித்தையை...
உன் வீட்டில்
எல்லாரும் இருக்கையிலும்,
பயப்படாமல் என்னையே
பார்த்துக் கொண்டிருப்பாயே !!
அந்த தைரியத்தை...
உன் அப்பாவோடு நான்
பேசி கொண்டிருக்கையில்
அவருக்கு பின்னால் நின்று
உதடு குவித்து கொஞ்சுவாயே!!
அந்த குறும்பை..//
ஒரு காதல் குறும்படம் பார்த்த உணர்வு.
நுணுக்கம், வித்தை, தைரியம், திருட்டுத்தனம்,குறும்பு,ஆசை,விந்தை, அன்பு,பிரியம்,பாசம்... ன்னு காதலோட தசாவதாராத்தையும் மிக அழகாக வரிசைப்படுத்தியிருப்பது அழகு.
//புத்தகத்தில் எழுதியிருந்த
என் பெயரின் முன்னால்
உன் பெயரை எழுதி
காதலை சொன்னாயே !!
அந்த நுணுக்கத்தை...//
ஆஹா சூப்பர் மாமு உன்னால் மட்டுமே இப்படி காதல் ரசம் சொட்ட சொட்ட எழுதமுடியும்...
//ஊரெல்லாம்
வாயாடி என
பெயரெடுத்து விட்டு
என் தாயிடம் மட்டும்
நல்ல பெண் ஆனாயே !!
அந்த வித்தையை...//
அது அவங்க கூடவே பிறந்தது மாமு
//உன் வீட்டில்
எல்லாரும் இருக்கையிலும்,
பயப்படாமல் என்னையே
பார்த்துக் கொண்டிருப்பாயே !!
அந்த தைரியத்தை...//
ஆஹா...மாட்டுனடி மாப்ள
எல்லாமே ரசிச்சு படிச்ச்சேன்
வாழ்த்துக்கள் லோகு
நல்ல கவிதை லோகு அண்ணா !!...
இன்னுமா கற்றுத்தரலை மச்சான்..
நான் கற்றுக்கொண்டேன்...
துஷ்யந்தன்
பிரான்ஸ்
Nasunuu iruku logu
adikadi niraja elludenga T la...
// முரளிகண்ணன் said...
அருமை. அட்டகாச கவிதை//
நன்றி அண்ணா... அடிக்கடி வாங்க..
// ☼ வெயிலான் said...
நல்ல கவிதை லோகு!!!!!!//
நன்றி அண்ணா..
// டக்ளஸ்... said...
நல்லாருக்கு நண்பா...!//
நன்றி மாப்ள.. இதை நல்ல முறையில் எழுத உதவியதற்கும்..
அருமை லோகு.
இந்த கவிதை நிச்சயம் நீ எழுதியது அல்ல, எனக்கு தெரியும் இது காதல்
எழுதியது.
:-)
// துபாய் ராஜா said...
அருமை.அருமை.அனுபவித்தவர்களுக்கு புரியும் இதன் பெருமை.
மிகவும் ரசித்த வரிகள்.
//ஊரெல்லாம்
வாயாடி என
பெயரெடுத்து விட்டு
என் தாயிடம் மட்டும்
நல்ல பெண் ஆனாயே !!
அந்த வித்தையை...
உன் வீட்டில்
எல்லாரும் இருக்கையிலும்,
பயப்படாமல் என்னையே
பார்த்துக் கொண்டிருப்பாயே !!
அந்த தைரியத்தை...
உன் அப்பாவோடு நான்
பேசி கொண்டிருக்கையில்
அவருக்கு பின்னால் நின்று
உதடு குவித்து கொஞ்சுவாயே!!
அந்த குறும்பை..//
ஒரு காதல் குறும்படம் பார்த்த உணர்வு.
நுணுக்கம், வித்தை, தைரியம், திருட்டுத்தனம்,குறும்பு,ஆசை,விந்தை, அன்பு,பிரியம்,பாசம்... ன்னு காதலோட தசாவதாராத்தையும் மிக அழகாக வரிசைப்படுத்தியிருப்பது அழகு.//
விரிவான அலசலுக்கு மிக்க நன்றி அண்ணா..
//பிரியமுடன்...வசந்த் said...
ஆஹா சூப்பர் மாமு உன்னால் மட்டுமே இப்படி காதல் ரசம் சொட்ட சொட்ட எழுதமுடியும்...
எல்லாமே ரசிச்சு படிச்ச்சேன்
வாழ்த்துக்கள் லோகு
//
மிக்க நன்றி அண்ணா..
// கத்துக்குட்டி said...
நல்ல கவிதை லோகு அண்ணா !!...//
ரொம்ப நன்றி ராம் தங்கச்சி..
// Anbu said...
இன்னுமா கற்றுத்தரலை மச்சான்..
நான் கற்றுக்கொண்டேன்...//
உனக்கு இன்னும் அந்த வயசு இல்ல மாப்ள.. அவசர படாதே.. :)
நன்றி..
//துஷ்யந்தன்
பிரான்ஸ்
Nasunuu iruku logu
adikadi niraja elludenga T la...//
Thanks.. adikkadi elutha muysikkiren..
/முரளிகுமார் பத்மநாபன் said...
அருமை லோகு.
இந்த கவிதை நிச்சயம் நீ எழுதியது அல்ல, எனக்கு தெரியும் இது காதல்
எழுதியது.
:-)//
உங்க பின்னூட்டமே அழகிய கவிதையா இருக்கு..
நன்றி அண்ணா..
லோகுவுக்கு முத்திடுத்து.. எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவாரோ ?
லோகு, நான் மிக மிக மிகவும் ரசித்தேன். அருமை, மிக அருமை.
நல்ல கவிதை லோகு.உருக்கமாக இருக்கு.காதல் பரவிக் கிடக்கு.
தொடர்பதிவுக்கு அழைக்கப் பட்டுள்ளீர்கள்.. நன்றி
// [பி]-[த்]-[த]-[ன்] said...
லோகுவுக்கு முத்திடுத்து.. எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவாரோ ?//
எங்கேயும் செல்லாது.. இந்த பாதைல No Entry போட்டு இருக்கு.. கவலைபடாதீங்க..
/ பீர் | Peer said...
லோகு, நான் மிக மிக மிகவும் ரசித்தேன். அருமை, மிக அருமை.//
நன்றி அண்ணா..
//ஹேமா said...
நல்ல கவிதை லோகு.உருக்கமாக இருக்கு.காதல் பரவிக் கிடக்கு.//
மிக்க நன்றி.. அடிக்கடி வாங்க..
// SUREஷ் (பழனியிலிருந்து) said...
தொடர்பதிவுக்கு அழைக்கப் பட்டுள்ளீர்கள்.. நன்றி//
பார்த்தேன்.. நன்றி..
ஓ நீங்க டபுள் ஆக்ட் (அந்தப்பக்கம் கமல் இந்தப்பக்கம் சூர்யா?) நாயகனா? இப்போது தான் விசயம் தெரிந்தது. அந்தப்பக்கம் அச்சப்பட வைத்து இந்தப் பக்கம் காதலிக்கச் சொன்னால்? ம்ம்ம்ம..... உங்களையெல்லாம் பார்ர்த்ததாா பொறாமையா இருக்கு. மறுபடியும் பொள்ளாச்சி பக்கம் போயிட்டு வரனும்.
தேவியர் இல்லம். திருப்பூர்.
// ஜோதிஜி. தேவியர் இல்லம். said...
ஓ நீங்க டபுள் ஆக்ட் (அந்தப்பக்கம் கமல் இந்தப்பக்கம் சூர்யா?) நாயகனா? இப்போது தான் விசயம் தெரிந்தது. அந்தப்பக்கம் அச்சப்பட வைத்து இந்தப் பக்கம் காதலிக்கச் சொன்னால்? ம்ம்ம்ம..... உங்களையெல்லாம் பார்ர்த்ததாா பொறாமையா இருக்கு. மறுபடியும் பொள்ளாச்சி பக்கம் போயிட்டு வரனும்.
தேவியர் இல்லம். திருப்பூர்//
அப்படியெல்லாம் இல்லைங்க.. அங்க ஒரு தலை ராகம்.. இங்க ஆட்டோகிராப்.. மொத்ததுல
நல்லதா எதுவும் நடக்கல.. எனவே நீங்க பொறாமை படும் அளவுக்கு ஒன்னும் இல்ல..
நன்றி.. அடிக்கடி வாங்க..
நல்லா வலியிரீயப்பா
ம்ம்ம் நல்ல கவிதை
ஊரெல்லாம்
வாயாடி என
பெயரெடுத்து விட்டு
என் தாயிடம் மட்டும்
நல்ல பெண் ஆனாயே !!
அந்த வித்தையை...
\///
கத்துகிட்டு கற்றுகொடுங்க
நான் போடலியா - இல்ல நீ ரிலீஸ் பண்ணலயா - ம்ம்ம்ம்
நுணுக்கம், வித்தை, தைரியம், குறும்பான திருட்டு, ஆசை, விந்தை, அன்பு, பிரியம், பாசம் இத்தனைக்கும் இலக்கணம் உன் காதலி எனக் கவைதை எழுதிய கற்பனை வளம் நன்று லோகு
நல்வாழ்த்துகள் லோகு