காதல் கடிதங்கள்..


கனவே கனவே
என் கனவெல்லாம் நீயே...

அசுரனே வந்தாலும்
அசராத என்னை
சிறு புன்னைகையாலே
வெட்டி சாய்த்தாய்...

நீ நடக்கும் வீதியில்
தூசியே இருக்காது
நீ வருவாய் என்று
நூறு முறை
நான் கடந்து போவதால்...

நீ இருக்கும் இடத்தில்
வெயில் இருக்காது
நிழலாய் உன்னை
நான்
தொடருந்து வருவதால்...

நீ தூக்கி ஏறியும்
குப்பைக்குக்கூட
கால் இருக்கிறது
என் அறையில் எப்படியோ
அது குடி புகுவதால்...

என் வீட்டு கண்ணாடி
பொய் சொல்கிறது
அதில்
என்னைக் காணாமல்
உன்னைக் காண்பதால்

உன் பார்வை தூண்டிலில் தவிக்கும் மீன் நான்
ஆனால் இன்னும்
தூண்டிலைத்தான் காதலிக்கிறேன்

என்னைத் துண்டு
துண்டாக்கிவிட்டு நீயோ
தூரமாய் போகிறாய்...

தூக்கத்தைத் தொலைத்து நான்
திருடனாய் விழிக்க
உன்னிடம் கொடுக்காத
என் காதல் கடிதங்கள் மட்டும்
சுகமாய் தூங்குகின்றன
என் படுக்கை அறையில்...!!!
13 Responses
  1. லோகு Says:

    ரொம்ப நல்லாருக்கு.. வாழ்த்துக்கள்.


  2. //என் வீட்டு கண்ணாடி
    பொய் சொல்கிறது
    அதில்
    என்னைக் காணாமல்
    உன்னைக் காண்பதால்//

    அழகான, ஆழமான கவிதை...


  3. Raju Says:

    அருமைல..!


  4. //நீ நடக்கும் வீதியில்
    தூசியே இருக்காது
    நீ வருவாய் என்று
    நூறு முறை
    நான் கடந்து போவதால்...

    நீ இருக்கும் இடத்தில்
    வெயில் இருக்காது
    நிழலாய் உன்னை
    நான்
    தொடர்ந்து வருவதால்..//

    இந்த கவிதையின் மாஸ்டர் பீஸ் வரிகள். கலக்கல் அன்பு.

    ஒத்துக்கறேன்... உண்மையிலே நீ கவிஞன்தான். :))


  5. Anbu Says:

    \\லோகு said...

    ரொம்ப நல்லாருக்கு.. வாழ்த்துக்கள்.\\\


    நன்றி மச்சான்


  6. Anbu Says:

    \\\Sangkavi said...

    //என் வீட்டு கண்ணாடி
    பொய் சொல்கிறது
    அதில்
    என்னைக் காணாமல்
    உன்னைக் காண்பதால்//

    அழகான, ஆழமான கவிதை...\\

    நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்


  7. Anbu Says:

    \\♠ ராஜு ♠ said...

    அருமைல..!\\\

    நன்றி தல...


  8. Anbu Says:

    \\\\துபாய் ராஜா said...

    //நீ நடக்கும் வீதியில்
    தூசியே இருக்காது
    நீ வருவாய் என்று
    நூறு முறை
    நான் கடந்து போவதால்...

    நீ இருக்கும் இடத்தில்
    வெயில் இருக்காது
    நிழலாய் உன்னை
    நான்
    தொடர்ந்து வருவதால்..//

    இந்த கவிதையின் மாஸ்டர் பீஸ் வரிகள். கலக்கல் அன்பு.

    ஒத்துக்கறேன்... உண்மையிலே நீ கவிஞன்தான். :))\\\\\

    எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான் அண்ணா...


  9. Indherjith Says:

    kadalil thathalippavanukku kalangarai vilakkam pola yenakku unga blog....

    Migavum arumaiyaga irundahdhu...nandri


  10. பயபுள்ளே - இவனும் ஆறு மாசம் கழிச்சு வந்திருக்கான் - சூப்பரா காதல் கவிதை எழுதறான் - ஒரு தலைக் காதல் வெற்றி பெற நல்வாழ்த்துகள் அன்பு