நன்றி..!

முன்னாள் காதலியை
ஒவ்வொரு முறையும்
கணவனுடன்
எதிரில் பார்க்க நேரும் போதெல்லாம்,
வராத அழைப்பை ஏற்கும்
தொனியில் செவியில்
அழுத்தும் செல்ஃபோன்.

அவள் என்னைத் கடந்து்
சென்ற பின், மெல்ல
முகம் தூக்கித் திரும்பி
உற்று நோக்கத் தூண்டும்
செல்லரிக்கா காதல்
கொண்ட மனம்.

அவள் கணவனை தனியே
பார்க்க நேரும் போது,
பற்றிக்கொண்டு வரும்
பொறாமையுடன்
கலந்த கோபம்.

வீடு வந்ததும் மனைவியின்
சிரிப்பிலும், உணவு பரிமாறும்
அந்த அன்பிலும் பட்டுத்
தெறிக்கின்ற என் பயம்
கலந்த இயலாமை.

கழுத்தைத் தாவி தொற்றிப்
பிடித்துக் கொள்ளுமென்
குழந்தையின் பிஞ்சுக்
கைவிரல்களால் தூண்டப்படும்
பொறுப்புணர்ச்சி.

தனியறையில்,படித்து
பாதுகாக்கப்படும்
என் காதல் கலந்த
கடிதக்காகிதங்கள்,
வாழ்த்தட்டைகள்.

இவையனைத்திற்கும்
நன்றி சொல்ல கடமைப்
பட்டிருக்கிறேன்,ஒவ்வொரு
முறையும் எனக்கென்
பழைய காதலை
நினைவுப்படுத்துவதற்காக..!

Next மீட் பண்ணுவோம்
♠ராஜூ♠
8 Responses
  1. //முன்னாள் காதலியை
    ஒவ்வொரு முறையும்
    கணவனுடன்
    எதிரில் பார்க்க நேரும் போதெல்லாம்,
    வராத அழைப்பை ஏற்கும்
    தொனியில் செவியில்
    அழுத்தும் செல்ஃபோன்.//

    அனுபவக்கவிதை போல் இருக்கிறது...


  2. வேதனையும், இயலாமையும் கரை புரண்டோடுகிறது!!


  3. அருமையான 'நன்றி' கவிதை.

    எல்லோருக்குமே இதில் ஏதாவது ஒரு அனுபவம் நிச்சயம் இருக்கும்.



  4. //முன்னாள் காதலியை
    ஒவ்வொரு முறையும்
    கணவனுடன்
    எதிரில் பார்க்க நேரும் போதெல்லாம்,
    வராத அழைப்பை ஏற்கும்
    தொனியில் செவியில்
    அழுத்தும் செல்ஃபோன்.//

    ஹஹஹஹ ரொம்ப யாதார்த்தமா இருக்கு...
    உண்மையான வலி(ரி)களா? :)


  5. ரசித்தேன்.


  6. சத்தியமான வார்த்தைங்க


  7. அன்பின் ராஜு

    காதலர்களுக்கு திருமணம் - வேவ்வேறு மேடைகளில்

    மறக்க இயல வில்லை எனினும் மறக்க வேண்டும் ராஜு - நவ ரசங்களையும் கவிதையாக எழுதுபவன் தான் கவிஞன் - இருப்பினும் இது மாதிரிக் கவிதைகளைப் படிக்கும் போது மனம் என்னவோ செய்கிறது