காதல் இலர் தினம்.....

காதலருக்கு
தினம் தினம்.

காதல் இலருக்கு
ஒரு தினம்.
--------------------------------

கண்களின்
புணர்ச்சியில்
கருக்கொண்டது
காதல்.
-------------------------------------

காதல்
செய்த பாவம்
கல்யாணம்
செய்தால் போகும்
-----------------------------------
எவர் அறிவார் எவர் அறிவார்
காதல் வரும் நேரம்
காலன் வரும் நேரம்
எவர் அறிவார் எவர் அறிவார்
---------------------------
கண்ணிருந்தும் குருடராய்
காதிருந்தும் செவிடராய்
வாயிருந்தும் ஊமையராய்
காதல் இருந்தும் இல்லாமல்
கலியுக காதலர்.
17 Responses
  1. Unknown Says:

    அழகான வரிகள்


  2. லோகு Says:

    //காதலருக்கு தினம் தினம்.
    காதல் இலருக்கு ஒரு தினம். //

    இது எப்படி?? உல்டாவாத்தானே வந்து இருக்கணும்..

    ********

    நல்லாருக்கு தலைவா.. கலக்கிட்டீங்க



  3. superu... last lines romba nallaarukku.. =))


  4. nalla kaathal varikal. yaar arivaar enmanaiyum kaathalaiyum . eppadi ipaadi thonuthu ! vaalththukkal.


  5. ஓவரா பீல் பண்ணாதீங்க பாஸு!


  6. // சிநேகிதி said...
    அழகான வரிகள்//

    வரவிற்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி சிநேகிதி...


  7. // லோகு said...
    //காதலருக்கு தினம் தினம்.
    காதல் இலருக்கு ஒரு தினம். //

    இது எப்படி?? உல்டாவாத்தானே வந்து இருக்கணும்..//

    உண்மையான காதலருக்கு தனியாக தினம் ஏதும் தேவையில்லை. உள்ளத்தில் (உண்மையான) காதல் இல்லாதவர்க்குதான் இது போன்ற சம்பிராதயங்கள் எல்லாம் என்பதைத்தான்
    //காதலருக்கு தினம் தினம்.
    காதல் இலருக்கு ஒரு தினம். //

    என்று குறிப்பிட்டேன் தம்பி லோகு.

    ********

    /நல்லாருக்கு தலைவா.. கலக்கிட்டீங்க/

    எழுத தூண்டிய உங்களுக்குதான் நான் நன்றி சொல்லணும் லோகு.


  8. // இய‌ற்கை said...
    nice lines//

    வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி இயற்கை. ஆமா.. நீங்க இன்னும் பதிவுகள் ஆரம்பிக்கவில்லையா...


  9. // கலகலப்ரியா said...
    superu... last lines romba nallaarukku.. =)) //

    ரொம்ப ரொம்ப நன்றி ப்ரியா... :))


  10. // Madurai Saravanan said...
    nalla kaathal varikal. vaalththukkal.//

    வாங்க சரவணன், மதுரையும், மக்களும் சவுக்கியமா...

    //yaar arivaar enmanaiyum kaathalaiyum . eppadi ipaadi thonuthu ! //

    காதல் கொண்ட கணமே....
    கவிதை வருது தினமே... :))


  11. // ஆடுமாடு said...
    ஓவரா பீல் பண்ணாதீங்க பாஸு!//

    வாங்க,வாங்க ஆடுமாடு அண்ணாச்சி..

    ஓவர் ஃபீலிங்ஸ் உடம்பிற்கு ஆகாதுங்கிறது உண்மை தான்..
    இருந்தாலும் என்ன செய்ய ....
    காலம் செய்த கோலமிது... இது
    காதல் செய்த கோலமிது... :))


  12. //தியாவின் பேனா said...
    அருமையான பகிர்வு வாழ்த்துக்கள்.//

    வரவிற்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி தியாவின் பேனா ...



  13. // SUREஷ் (பழனியிலிருந்து) said...
    கலி முத்திடுச்சி..,//

    காதலும் தான் தலைவரே.... :))


  14. கவிதைகள் ஒவ்வொன்றும் அருமை . வாழ்த்துக்கள் !


  15. அன்பின் ராஜா

    குறுங்கவிதைகள் - நல்லாவே இருக்கு

    நல்வாழ்த்துகள்