வார்த்தை தவறிவிட்டாய்...


இதுதான் உலகமென
புரிந்த வயதிலிருந்து
நீ தான் வாழ்க்கையென
வாழ்ந்திருந்தேன்..


அழகும் நீதான்,
எனக்கு தெரிந்த ஒரே
அழகியும் நீதான் என
கவிதைகள் எழுதி வந்தேன்..


ஆசை குழந்தைகளோடு
அன்பாய் வாழ்வதாய்
நிதம் ஒரு சொப்பனம்
கண்டு வந்தேன்..


காலமெல்லாம் உன்னை
கைப்பிடிப்பேன் என்றெண்ணி
கண்ணும் கருத்துமாய்
காதலை வளர்த்தேன்..


கனவு கை கூடுமென
நினைத்திருக்கையில்
கல்யாண மாலையோடு நிற்கிறாய்
மாற்றானோடு..


இது தான் விதியென
ஏற்றுக்கொள்ளலாம்..
இன்னார்க்கு இன்னார் என
எழுதியிருப்பதாய் தேற்றிக் கொள்ளலாம்..


ஆனால்
அம்மாவை கேட்டு அழும்
நம் கனவு குழந்தைகளுக்கு இனி
என்ன பதில் சொல்வேன் ..
25 Responses
 1. வெகு சாதரணமான ஒரு கவிதையை கடைசி நாலு வரிகள் எங்கோ தூக்கிப் போகின்றன.. அருமை..


 2. ஹேமா Says:

  கனவோடு ஒரு வாழ்வு.அதை ஏன் இப்படிக் கவலையாய்...!


 3. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
  தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
  www.ulavu.com
  (ஓட்டுபட்டை வசதிஉடன் )
  உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

  இவண்
  உலவு.காம்


 4. \\காலமெல்லாம் உன்னை
  கைப்பிடிப்பேன் என்றெண்ணி
  கண்ணும் கருத்துமாய்
  காதலை வளர்த்தேன்..\\

  \\ஆனால்
  அம்மாவை கேட்டு அழும்
  நம் கனவு குழந்தைகளுக்கு இனி
  என்ன பதில் சொல்வேன் .. \\

  இது முர‌ண்...!


 5. //ஆனால் அம்மாவை கேட்டு அழும்
  நம் கனவு குழந்தைகளுக்கு இனி
  என்ன பதில் சொல்வேன் ..//

  'வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா'ன்னு கனவுபிள்ளைகளோடு போய் சேது மாதிரி ஏர்வாடி வண்டியில ஏறிட வேண்டியதுதான்....


 6. Anbu Says:

  முடியலை .....

  அவ்வ்வ்வ்வ்வ்வ் 7. நல்ல கவிதை ..

  அப்புறம் ஒரு விஷயம் கேக்கணும் ...

  இந்த வார கனவு தேவதையா இந்த பொண்ணே இன்னும் எவ்ளோ மாசத்துக்கு இருக்கும்???


 8. லோகு Says:

  // கார்த்திகைப் பாண்டியன் said...

  வெகு சாதரணமான ஒரு கவிதையை கடைசி நாலு வரிகள் எங்கோ தூக்கிப் போகின்றன.. அருமை..//

  நன்றி அண்ணா..


 9. லோகு Says:

  // ஹேமா said...

  கனவோடு ஒரு வாழ்வு.அதை ஏன் இப்படிக் கவலையாய்...!//

  வாழ்வே கனவாய் போனதால்...


  நன்றி..


 10. லோகு Says:

  / ராஜு.. said...

  \\காலமெல்லாம் உன்னை
  கைப்பிடிப்பேன் என்றெண்ணி
  கண்ணும் கருத்துமாய்
  காதலை வளர்த்தேன்..\\

  \\ஆனால்
  அம்மாவை கேட்டு அழும்
  நம் கனவு குழந்தைகளுக்கு இனி
  என்ன பதில் சொல்வேன் .. \\

  இது முர‌ண்...!//

  விடுங்க பாஸ்... கவிதை முயற்சி தானே... இதெல்லாம் சகஜம்..


 11. லோகு Says:

  / துபாய் ராஜா said...

  //ஆனால் அம்மாவை கேட்டு அழும்
  நம் கனவு குழந்தைகளுக்கு இனி
  என்ன பதில் சொல்வேன் ..//

  'வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா'ன்னு கனவுபிள்ளைகளோடு போய் சேது மாதிரி ஏர்வாடி வண்டியில ஏறிட வேண்டியதுதான்....//

  கிளம்பியாச்சு.. எங்கே செல்லும் இந்த பாதை.............


 12. லோகு Says:

  // Anbu said...

  முடியலை .....

  அவ்வ்வ்வ்வ்வ்வ்//

  தண்ணிய குடி.. தண்ணிய குடி..


 13. லோகு Says:

  // பீர் | Peer said...

  நைஸ்//

  Thanks anna..


 14. லோகு Says:

  // கத்துக்குட்டி said...

  நல்ல கவிதை ..

  அப்புறம் ஒரு விஷயம் கேக்கணும் ...

  இந்த வார கனவு தேவதையா இந்த பொண்ணே இன்னும் எவ்ளோ மாசத்துக்கு இருக்கும்???//

  யாராவது கேப்பாங்களான்னு தான் மாத்தாம இருந்தேன்.. ராம்க்காக மாத்தியாச்சு.. இந்த பொண்ணு ரொம்ப சூப்பரா இருக்குல..

  நன்றி..


 15. எங்களுக்கே கொரியன் பொண்ணு போட்டோ வா...
  சரி தான் .... நீ நடத்து ....


 16. லோகு Says:

  // கத்துக்குட்டி said...

  எங்களுக்கே கொரியன் பொண்ணு போட்டோ வா...
  சரி தான் .... நீ நடத்து ....//

  உங்களுக்கு யார் கொடுத்தா... எனக்கே எனக்கு.. :))))


 17. Anonymous Says:

  thusyanthan
  france.

  (((கார்த்திகைப் பாண்டியன் said...
  வெகு சாதரணமான ஒரு கவிதையை கடைசி நாலு வரிகள் எங்கோ தூக்கிப் போகின்றன.. அருமை..))))

  realy.....


 18. Anonymous Says:

  thusyanthan
  france.

  \\
  அம்மாவை கேட்டு அழும்
  நம் கனவு குழந்தைகளுக்கு இனி
  என்ன பதில் சொல்வேன் .. \\

  intha vari
  loguvaal mathumeaa mudinjadee
  ithan loguu
  super pass


 19. //ஆனால்
  அம்மாவை கேட்டு அழும்
  நம் கனவு குழந்தைகளுக்கு இனி
  என்ன பதில் சொல்வேன் //

  அட அட அட

  எப்டி லோகு காதல் கவிதை எப்டி எழுதுறன்னு சொல்லிக்குடுங்களேன்.


 20. gayathri Says:

  பிரியமுடன்...வசந்த் said...
  //ஆனால்
  அம்மாவை கேட்டு அழும்
  நம் கனவு குழந்தைகளுக்கு இனி
  என்ன பதில் சொல்வேன் //

  அட அட அட

  எப்டி லோகு காதல் கவிதை எப்டி எழுதுறன்னு சொல்லிக்குடுங்களேன்.


  appadiye enakum konjam solli kodunga pa


 21. gayathri Says:

  லோகு said...
  // ஹேமா said...

  கனவோடு ஒரு வாழ்வு.அதை ஏன் இப்படிக் கவலையாய்...!//

  வாழ்வே கனவாய் போனதால்...  ada ennapa ithu

  ungalukkum kathal vali thanthu vittatha


 22. லோகு Says:

  // gayathri said...

  எப்டி லோகு காதல் கவிதை எப்டி எழுதுறன்னு சொல்லிக்குடுங்களேன்.


  appadiye enakum konjam solli kodunga pa//


  உங்களுக்கு கவிதை எழுத சொல்லி தர்றதா.. உங்க கவிதைக்கு முன்னாடி நான் எழுதறது எல்லாம் கவிதைன்னு சொல்லிக்கவே வெக்கமா இருக்கு.. உங்க பெருந்தன்மைக்கு நன்றி..

  //ada ennapa ithu

  ungalukkum kathal vali thanthu vittatha//

  Same Blood.. :((


 23. Anonymous Says:

  mudiyala... :(....
  epdi ipdi unkala mattum mudiyuthu
  arumai nanpaa....


 24. அன்பின் லோகு

  காதல் தோல்வி - கற்பனைக் கவிதை - இருந்தும் சூப்பர் - அழகு சோடுகிறது - நச்சுன்னு முடிச்சிருக்கே - வசந்த காயத்ரி எல்லாம் கத்துக் கொடுக்கச் சொல்றாங்கபா - பெரிய ஆளு தான் நீ