காதல் கரிசனம்நீ  வெட்கப்பட்டு  பார்த்தால்
நான்  தூக்கம் கெட்டு போகிறேன்…

நீ ஓரக்கண்ணால் பார்த்தால்
நான் நேரம் மறந்து நிற்கிறேன்…

நீ கடைக்கண்ணால் பார்த்தால்
 நான் விடை தெரியாமல் திரிகிறேன்...

கண்பிரியம் காட்டிடும் பெண்ணே
திண்மனம் நெகிழ்ந்து
காதல்கருணையோடு வேண்டும்
கொஞ்சம் கரிசனம்...

முகம் காட்ட மறுக்காமல்
முன்வந்து தந்திடு
உன் முழு தரிசனம்...

கன்னி உனைக்கண்டால் அனுதினம்
அடைந்திடும் அமைதி என்மனம்.

கனவுக் காதல்...


கண்மூடி
சென்றேன்
கனவு தேசம்..

அங்கும் துரத்தி வந்து
தொல்லை தந்தது
தோழி உன்
காதல் நேசம்….

காதல்...காதல்..காதல்.கோடையில் கொசுக்கடி

அதனினும் கொடியது
உன் நினைப்படி

அன்றாடம் நீ
புழங்கும் அறையடி

அங்கெலாம் நான்
இல்லாக் குறையடி

இடுப்பிலே உனக்கு மடிப்படி

அங்கே இருந்து  தவிக்குது
 என் இதயத்துடிப்படி

ஊரெல்லாம் இருக்குது உறவடி

நீ  இல்லாமல்
என்நிலை துறவடி

அனைவரும் வியக்கும்
அழகுச்சிலையடி

அருகில் இருந்து
 ரசிக்க முடியா
நிலையடி

அனுதினம் வருகுது
காலை மாலையடி

அன்பே உன் அருகாமை
வேண்டி நான்
அரற்றுவது
கடும் பாலையடி

கன்னி நீ இருக்கும்
திசையடி

காண முடியா மனதில்
 உன் நினைவு கசையடி

பறக்க எனக்கில்லை சிறகடி 

பாவை உனை நினைத்து
பதறும் என்நிலை
ஈரம்காய்ந்த விறகடி

ஓய்வில்லா உழைப்படி
ஒப்புக்குத்தான் இந்த பிழைப்படி
போதும் பொன்னே  இந்த இழப்படி
  
வேண்டும் இறைவன் நினைப்படி
அமைப்போம் வாழ்வை நல்ல நிலைப்படி

எப்பொழுது தான் சேர்வேன் உன்னை
அப்பொழுது நான் மறப்பேன் என்னை

அந்த நாளும் வருவது எப்போது
எண்ணி ஏங்குது என்மனம் இப்போது....

காதல் வாஸ்து


உன்
கண்வீச்சு
 மின்னல்…. 

விரும்பி
வேண்டி
எப்போதும்
திறந்தே
கிடக்கிறது
    என்
     மன ஜன்னல்….
மீண்டும்
மீண்டும்
உன்  உறவு…

வேண்டும்
வேண்டும்
 என்றே
விட்டு விட்டு
துடிக்குது என்
இதயக்கதவு…

என் மனவீதியில்....


மண்வீதியில்
மறையலாம்
பாதச்சுவடுகள்…

என்றும்
என்
மனவீதியில்
மறையாது…

பாவை
உன்
பார்வைச்
சுவடுகள்….

மாயக்காரி...


நீ
சேலை
கட்டி
வரும்போது
முந்தானைச்
சிறையில்
முடிந்து
கொள்கிறாய்
என்
மனதை….


சுரிதார்
அணிந்து
வரும்போது
துப்பட்டா
வலையில்
இழுத்துச்
செல்கிறாய்
என்
நினைவை…..