காதல் மருந்துஉடல் பிணி
படுத்திடும் போதும்..

தொடர் பணி
 கடுத்திடும் போதும்..

இனித்திடும்
உன் நினைவுகள்..

தணித்திடும்
என் உபாதைகள்...

காதல் நினைவு...நினைவு
தெரிந்த நாள்
முதல்
தலைமுடியை
 தூக்கி வாரி
வணங்காமுடியாய்
வளைய வருவதுதான்
என் பழக்கம்...

ஒரு தீபாவளித் திருநாளில்
எனது வீட்டிற்கு வந்து
திரும்பும் உன்னை
பேருந்துநிலையம் வரை
வழியனுப்ப
நானும்
உடன் நடந்து
வந்து கொண்டிருந்தேன்...

ஆளில்லா இருட்டுச்சாலை
அந்திக்கருக்கல்காற்றில்
அலைந்து கலைந்திருந்த
 என் தலைமுடியை
மேலும் கலைத்து
பணியச் செய்து
பார் இப்போது
முன்னை விட
அழகாகி விட்டாய்
என்றாய்…

அன்று முதல்
மாறியது
என்
தலை எழில்
மட்டுமல்ல …

காதல்  கன்னி
உன் 
கை பட்டு
தடதடத்து
தடுமாறிப்
போனது
 என்
 தலை எழுத்தும்
கூடத்தான்…

காதல் இடுகைகள்
உள்ளத்தில் 
 எப்போதும்
உன் நினைவுகள்

ஊற்றாய்
 சுரக்குது
உள்ளிருந்து 
 பல புனைவுகள்

கண்மூடாமல் 
நான் கண்டிடும் 
 கனவுகள்

காலம் 
கனிந்திட்டால்
ஆகிடும் நனவுகள் 

என் மனதில்  
நீ எழுப்பிட்ட
காதல் படுகைகள்

எண்ணி எண்ணி
 இறைத்திடும்
இதுபோல்
 பலப்பல 
இடுகைகள்