காதல் வெள்ளம்
பொங்கி வரும் 
காவிரியை 
தடுத்திடலாம் 
கல்லணை...

பூரித்து வரும் 
என் 
காதல் வெள்ளம் 
தாங்கிடுமா
 உன் 
கண் அணை...

-----------------------------------------------------------------------------------------------தலை குளித்து
 நீ
 வரும் நேரம்...

எதிர் வரும்
என் நிலை
குறித்தும் 
கவனம் கொள்...

-------------------------------------------------------------------
உற்றுப் பார்த்தேன் 
உன் முதுகில் 
சில பூனைமுடி...

 ஊற்றெடுத்து
சுரக்குது
என் உள்ளத்தில்
 பல ஞானமடி...

காதல் மொழிகள்
போதுமென்ற 
மனமே
பொன் செய்யும்
 மருந்து…

பொழுது  எத்தனை
ஆனாலும்
அலுக்கவில்லை
கன்னி உன்
காட்சி விருந்து…

---------------------------------------------------------

சிப்பியில்
விளைவது
முத்து…

அழகுச்சிற்பமே
எப்போது ஆவாய்
நீ எந்தன் சொத்து….

---------------------------------------------------------


அறம்
பொருள்
இன்பம்...

அத்தனையும் 
தேடி
உன் பின்
அலைவதில் தான்
எத்தனை
துன்பம்...

காதல் பா(ட்)டு
இயல்
இசை
 நாடகம்

கன்னி நீ
 எல்லாம்
 கலந்த
ஊடகம்

பாவை
உன் பார்வை
போடும்
பூடகம்

எப்போதும்
எனக்கு
 புரிந்திடா
ஏடகம்

நங்கை நீ
இல்லா
வாழ்க்கை
கடும் காடகம்

இதயம் இளகி
 என் வாழ்வில்
இணைந்து
எப்போது
பாடுவாய்
காதல் பாடகம்