நெஞ்சமெல்லாம் காதல்..தமிழை செம்மொழி என்று
அறிவித்திருக்கிறார்களாம்..
நீ பேசுவதை கேட்டிருந்தால்
தமிழை தேன் மொழி என்றிருப்பார்கள்..

*******

காய்ச்சலடிக்கிறதா என்று
நெற்றியில் கை வைத்தாய்..
காய்ச்சல் போய், இப்போ 
காதலடிக்கிறது..

********உன் பெயரிலில்லுள்ள
அந்த
மூன்று உயிர்மெய்யெழுத்தும் தான்
மெய்யாலுமே
உயிர் உள்ள எழுத்து..

*******

இப்பொழுதுதான்
பார்க்கிறேன்..
ஒரு குமுதம்,
விகடன் படிப்பதை..

******

உலகின் மென்மையான
ஆயுதம்
உன் உதடுகள் தான்..

******

ஒவ்வொரு முறை
உன்னோடு பேசி முடித்து
போனை வைக்கும் போதும்,
இன்னும் ஏதோ ஒன்று
மிச்சமிருக்கிறது..
17 Responses
 1. மணி Says:

  அருமையாக இருக்கிறது கவிதை. காதலியிடம் கொடுக்க காப்பி அடிக்கலாம்


 2. வனம் Says:

  வணக்கம் லோகு

  ம்ம்ம் நல்லா இருக்கு.
  அதிலும் அந்த கடைசி பத்தி ரோம்ப நல்லா இருக்கு

  இராஜராஜன்


 3. \\தமிழை செம்மொழி என்று
  அறிவித்திருக்கிறார்களாம்..
  நீ பேசுவதை கேட்டிருந்தால்
  தமிழை தேன் மொழி என்றிருப்பார்கள்..\\


  ஏற்கனவே அவருக்கு முணு ராசா..!
  இன்னோன்னு வேறயா..?
  :-) 4. ஹா ஹா, வாய்யா..வா. உன் காதலுக்கு வந்த காய்ச்சல் கை வைத்ததும் சரியாகி விட்டதோ? 5. சென்னையில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. உங்கள் வலைப்பூவில் காதல். :)


 6. //காய்ச்சலடிக்கிறதா என்று
  நெற்றியில் கை வைத்தாய்..
  காய்ச்சல் போய், இப்போ
  காதலடிக்கிறது..//

  எத்தனை டிகிரி ராசா. (காதலடிக்கிற அளவ கேட்டன்

  ரசித்த வரிகள்.


 7. வாஹ்.. வாஹ்.. வாஹ்... சூப்பர்.


 8. அழகு!

  பெண்கள் படங்கள் இல்லாமல் எழுதவும். படிக்க நன்றாக இருக்கும்! 9. நல்லா இருக்கு.
  \\தமிழை செம்மொழி என்று
  அறிவித்திருக்கிறார்களாம்..
  நீ பேசுவதை கேட்டிருந்தால்
  தமிழை தேன் மொழி என்றிருப்பார்கள்..\\


 10. நல்வாழ்த்துகள்


 11. அடடா
  OPEN HEART பதிவில் உங்கள் பின்னூட்டம் பார்த்து இங்க வந்தேன்
  கவிதைகள் அருமை

  சொக்குது காதல்

  என் காதல் மழையை இங்க வந்து பாருங்க

  http://priyamudan-prabu.blogspot.com/2009/01/24-012009-845-pm.html


 12. காய்ச்சலடிக்கிறதா என்று
  நெற்றியில் கை வைத்தாய்..
  காய்ச்சல் போய், இப்போ
  காதலடிக்கிறது..
  /////////

  நல்லாயிருக்கு

  இதுக்கும் ஒரு லிங்க்
  http://priyamudan-prabu.blogspot.com/2009/10/2.html


 13. உலகின் மென்மையான
  ஆயுதம்
  உன் உதடுகள் தான்..
  ///

  ம்ம்ம் நான் கண்களை சொன்னேன் நீங்கள் உதடுகளை சொல்லுறியள்

  ஆகா ஆயுதம் மட்டுமே


 14. அன்பின் லோகு

  காதலியை வர்ணித்திருக்கும் அழகே அழகு - சொற்கள் தேர்ந்தெடுத்துப் பயன் படுத்தப்பட்டிருக்கின்றன - ஆயுதம் நிகழ்த்தும் போரினையும் மகிழ்வுடன் ரசிக்கிறாய் - இயற்கை தானே