காதல் செரிக்காது...!நான் உன்னைக் காதலிக்கிறேனென்று
உன்னிடம் வரும்போது
நீ பார்க்கும் பார்வையையும்
முடியாதென வந்து
விழப்போகும் சொற்களையும்
அப்படியே விழுங்கிவிடு.

என்னைப்பார்த்து
இதுவரை நீ சிரிக்கவேயில்லை
என்பதை மட்டும்
நினைவில் பொருத்திக்கொண்டு
அமாவாசை இருட்டில் சிரிப்பது
போலொருமுறையேனும்
சிரித்து விடு.

பாட்டியிடம் இரவுக்கதைகேட்கும்
ஒரு சிறுமி போல், உன்னை
நினைத்துக் கொள். நான்
காதல் சொல்லி விட்டுப்
போகின்றேன்.

சொல்லி முடித்தபின்
மறுத்தாலும். .,
காதல் ஏற்படுத்திக்கொடுத்த
உணர்வும் நிகழ்வும்
உன்னைப் பின்தொடர்ந்து
வந்து கொண்டேதானிருக்கும்
பின்னொருநாளில்,
அக்காதலை நாமிருவரும்
சேமித்து வைக்காமல்
செரித்து விட்டாலும் கூட..!

Next மீட் பண்ணுவோம்
♠ராஜூ♠

குறிப்பு: இன்று முதல் இங்கு(ம்)..!
7 Responses
 1. லோகு Says:

  Welcome & Well done Raaju..


 2. //நான் உன்னைக் காதலிக்கிறேனென்று
  உன்னிடம் வரும்போது
  நீ பார்க்கும் பார்வையையும்
  முடியாதென வந்து
  விழப்போகும் சொற்களையும்
  அப்படியே விழுங்கிவிடு.//

  அருமை.

  //என்னைப்பார்த்து
  இதுவரை நீ சிரிக்கவேயில்லை
  என்பதை மட்டும்
  நினைவில் பொருத்திக்கொண்டு
  அமாவாசை இருட்டில் சிரிப்பது
  போலொருமுறையேனும்
  சிரித்து விடு.//

  அட்டகாசம்.

  //பாட்டியிடம் இரவுக்கதைகேட்கும்
  ஒரு சிறுமி போல், உன்னை
  நினைத்துக் கொள். நான்
  காதல் சொல்லி விட்டுப்
  போகின்றேன்.//

  தூள்.

  //சொல்லி முடித்தபின்
  மறுத்தாலும். .,
  காதல் ஏற்படுத்திக்கொடுத்த
  உணர்வும் நிகழ்வும்
  உன்னைப் பின்தொடர்ந்து
  வந்து கொண்டேதானிருக்கும்
  பின்னொருநாளில்,
  அக்காதலை நாமிருவரும்
  சேமித்து வைக்காமல்
  செரித்து விட்டாலும் கூட..! //

  சூப்பர்ம்மா.

  //இன்று முதல் இங்கு(ம்)..!//

  அது....... :))


 3. super. varavara kadal inikkuthaiyaa.


 4. Anonymous Says:

  சூப்பரா இருக்கு..!


 5. //பாட்டியிடம் இரவுக்கதைகேட்கும்
  ஒரு சிறுமி போல், உன்னை
  நினைத்துக் கொள். நான்
  காதல் சொல்லி விட்டுப்
  போகின்றேன்.//

  kalakkal.... :)


 6. நன்றி லோகு,ராஜாண்ணே,மதுரை சரவணன்,அனானி, சிவாஜி சங்கர்


 7. ஆறு மாசம் கழிச்சு எழுத வந்திருக்கான்யா - பட்டயக் கெளப்புறானே - பலே பலே