துளியில் சிதறிய முகம்!

வானமுடைந்துத் தெறித்த திரவத்
துகள்களென் தலை தொட,
கேசம் விட்டு நாசி நுனி வந்த
துளியொன்று நிலம் நனைத்த
நாளில்தான் மறைந்து போனாளவள்!

கண்ணுயர்த்தி நிமிர்ந்த போது,முகம்
தொட்டுச் சிதறியதோர் துளியில்
அவளின் முகம்!

இப்போது நிலம் விழுந்த துளி,
நில நாக்கை உவர்க்கச் செய்திருக்கலாம்.

-♠ராஜூ♠
2 Responses
  1. அருமையான கவிதை கடைசி வரி வர்ணனை நன்றாக உள்ளது! வாழ்த்துக்கள்!


  2. vinu Says:

    konjmaayk kaathalum