உறைந்த கடிதம்..

துயிலில்லா இரவுகள்,
புறங்கை தாங்கிய
முகவாய்களுடன்
நீள்கின்றன.
நகம் கடித்தலிலும்
பொழுதுகள் கழியத்தான்
செய்கின்றன.
மௌனம் களைந்து..
உனக்கான எழுத்துகளை,
பேனாவிலென் ரத்தம் ஊற்றி
மேகங்களின் உடலில்
எழுத முயல்கிறேன்.
பேனாவினுள் அதுவும்
உறைந்து நிற்கிறது.
என் காதலைப் போலவே..!
கூடவே கடிதமும்.

-♠ராஜூ♠
12 Responses
 1. லோகு Says:

  செம டச்சிங் கவிதை!!!

  ம்ம்.. என்னமோ ஆய்டுச்சுப்பா ராஜூக்கு..


 2. //பேனாவினுள் அதுவும்
  உறைந்து நிற்கிறது.
  என் காதலைப் போலவே..!
  கூடவே கடிதமும்//

  அருமை ராஜூ.


 3. காதல் ரத்தம் கசிந்து சொட்டுகிறது தேனாய் கவியில்..சூப்பர்


 4. நன்றி லோகு,ராஜாண்ணே,மலிக்கா..!


 5. இதைத்தான் நாங்க படிச்சுட்டம்ல, இருந்தாலும் நல்லாக்குது. 6. உறைந்து நிற்கிறது.
  என் காதலைப் போலவே..!
  கூடவே கடிதமும்.

  அருமை ராஜு!


 7. www.bogy.in Says:

  தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in


 8. MinMini.com Says:

  MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?
  அப்புறம் சீட் கிடைக்கலைன்னு
  Feel பண்ணக்கூடாது.


 9. கவிதை மிரட்டலா இருக்கு காலம் கடந்தாலும்.... பாராஅட்டுக்கள்.


 10. கவிதை அருமைங்க.


 11. நெகிழ்ச்சியான கவிதை.
  ரசிக்காமல் இருக்கமுடியவில்லை