காதல் ஏக்கம்பாவை
உன் மீது
கொண்டேன்   
பாங்காய்
காதல் ஏக்கம்


பாழாய்
போனது
பாவி என்
பலநாள்
 இரவு தூக்கம்


 வஞ்சி
உன்னை
அடைவதே
வாலிபன்  
என்
வலிய நோக்கம்


கொஞ்சிப்
 பேசி
கொடுத்திடு
 குறைவிலா ஊக்கம்

தத்தை 
உன் செயலால்
தணிந்திடுமே
காதல் காய்ச்சலின்
தாக்கம்...