உன் பேர் சொல்ல ஆசைதான்..


ங்கீதமாய்,
ம்யமாய்,
பெண்மையாய்,
யாழிசையாய் இருக்கிறது
உன் பெயர்..

அடைக்கலம் தருபவள் என்று
அர்த்தமாம் உன் பெயருக்கு..
அதை உண்மையாக்கு
என் காதலுக்கு அடைக்கலம் கொடுத்து..


என் பெயரை
யாராவது கேட்டால் கூட
உன் பெயரை சொல்லி
அசடு வழிகிறேன்..

எந்த மொழியில் எழுதினாலும்
அழகாய்த்தான் இருக்கிறது
உன் பெயர்..

உன் பெயரை சொல்லி
யாராவது அழைத்தால்
உனக்கு முன்னால் திரும்புகிறேன்
அனிச்சையாய் நான்..

அழகு குழந்தைகளை
பார்க்கும் பொழுதெல்லாம்
உன் பேர் சொல்லியே கொஞ்சுகிறேன்..
என்னையுமறியாமல்..

உன் பெயர் தாங்கிய
சாலையோர பெயர் பலகைகள் மட்டும்
அதிகமாய் மிளிர்கின்றன..

காத்திருக்கிறேன்..
எப்போது வெளிவரும்?
உன்பெயரில் தொடங்கும் திரைப்பாடல்!

கவிதை ஒன்று எழுத நினைத்து
காகிதம் பல கசக்கி, கடைசியில்
உன் பெயர் மட்டும் எழுதி முடிக்கிறேன்,
காவியம் எழுதிய திருப்தியில்..

13 Responses
 1. Anbu Says:

  சரண்யா....சரண்யா..

  சரண்யா....சரண்யா..


  பாட்டுத்தாங்க...ராகத்தோடு படிக்கவும்.


 2. நயந்தாரா தங்கட்சின்னா சும்மாவா...,


 3. லோகு Says:

  /Anbu said...

  சரண்யா....சரண்யா..

  சரண்யா....சரண்யா..


  பாட்டுத்தாங்க...ராகத்தோடு படிக்கவும்.
  //

  உனக்கே ஓவரா தெரியல..


 4. லோகு Says:

  //SUREஷ் (பழனியிலிருந்து) said...

  நயந்தாரா தங்கட்சின்னா சும்மாவா...,
  //

  அதானே..


 5. ம்ம்ம்...நல்ல அம்சமாத்தான் இருக்கு..(நான் கவிதையை சொன்னேன் :))


 6. ///உன் பேர் சொல்ல ஆசைதான்///

  இது டாக்டர் ரோட பட்டு மாதிரி தெரியுதே...


 7. Anonymous Says:

  thusyanthan
  france.

  hiii logu...
  humm.... aarampameaa kalakuringa pass...
  vaaldhukal.


 8. Anonymous Says:

  thusyanthan
  france

  அடைக்கலம் தருபவள் என்று
  அர்த்தமாம் உன் பெயருக்கு..

  Unmyijavaa????????? he.. he...


 9. Anonymous Says:

  thusyanthan
  france

  school work
  rempa busy...... blogg veravea time illea.....
  kananalluku praku inthyiku vanthan....
  humm....
  inpa athirsithan...
  enaveaaaa marupathujum kalakunga pass.


 10. Anonymous Says:

  thusyanthan
  france.

  """உன் பெயர் தாங்கிய
  சாலையோர பெயர் பலகைகள் மட்டும்
  அதிகமாய் மிளிர்கின்றன.."""""

  ITHEA.. ninga..
  nan ungalloda muthal muthal phone la pesum pothu
  sonatha ninyivuuu.... intha varija mathum... nalla ninyivu iruku...... ninyivu iruka???? (( france time ku adiju unga time nadeiravu... he..he... ipo ninyivu verumeaa))


 11. Anonymous Says:

  thusyanthan
  france

  ANNI SARNYA PERULLA songe a???
  humm... athusariiiiiii

  logu+sarnya=love

  nalla than irukupaaaaaaaaaaaa


 12. சினிமா நடிகைகங்கள்லாம் இப்போ கணிப்பொறி துறையில இருக்கறவங்களைத்தான் கல்யாணம் பண்றாங்க.வெயிட்டா வெயிட் பண்ணுங்க. சான்ஸ் கிடைக்கலாம். :))


 13. ம்ம்ம் இப்படித்தான் எழுதணும் இப்பல்லாம் - சரி சரி - நல்லாஅத்தான் கற்பனை பண்ணி இருக்கே

  சின்னப்பய பாட்டெல்லாம் ராகம் போட்டுப் பாடறான்

  நல்லாருங்கப்பா