காதல் வளர்த்தேன்..



உன் ஒவ்வொரு செய்கையிலும்
என் காதல் வளர்கிறது..
நீ நெற்றி முடி ஒதுக்கையில்
நூறு மடங்காய்..

********
மணிக்கணக்கில் யோசித்தும்
எழுத முடியவில்லை..
லேசாய் தலைசாய்த்து
ஓரக்கண்ணால் பார்ப்பாயே
அதற்கு இணையான கவிதையை..

*********
இதயம் துடிப்பது நின்றால்
எனக்கு மரணம் நிகழுமா தெரியாது
உன்னை நினைப்பது நின்றால்
மறுகணம் மரணம் நிகழும்!!

********

நீ பிடிக்கும் போது மட்டும்
தானாக வந்து சிக்கி கொள்கின்றன
பட்டாம் பூச்சிகள்..

********
'நான் என்ன அவ்வளவு
அழகாவா இருக்கிறேன்?' என்கிறாய்
பாவம் உனக்கெப்படி தெரியும்
கண்ணாடி கூட
கால்பங்கு தானே காட்டுகிறது
உன் அழகை!!

*******
தலைக்கணத்தோடு திரிகிறது
உன் மடியில் தினமும் துயிலும்
பூனைக்குட்டி..

*********

அழகு,
பேரழகு,
இந்த வார்த்தைகளின்
Superlative நீ!!

*********
நீதான் அழகி என்று
கர்வம் கொள்ளாதே!
உன்னை ஜெயிக்க பிறப்பாள்
நம் மகள்!!

*********

காதலுடன்,
21 Responses
  1. மச்சி... நல்லா இருக்கியா மச்சி....
    எனக்கு வேலை கொடுத்திருக்கே.... நீ நல்லா இரு.


  2. Anonymous Says:

    துஷ்யந்தன்
    பிரான்ஸ்.

    ((((( நீ பிடிக்கும் போது மட்டும்
    தானாக வந்து சிக்கி கொள்கின்றன
    பட்டாம் பூச்சிகள்..)))))

    சும்மா நச்சுனு இருக்கு தல...


  3. Anonymous Says:

    துஷ்யந்தன்
    பிரான்ஸ்.

    (((( நீதான் அழகி என்று
    கர்வம் கொள்ளாதே!
    உன்னை ஜெயிக்க பிறப்பாள்
    நம் மகள்!!)))))

    ம்... அது சரி


  4. swizram Says:

    /*மணிக்கணக்கில் யோசித்தும்
    எழுத முடியவில்லை..
    லேசாய் தலைசாய்த்து
    ஓரக்கண்ணால் பார்ப்பாயே
    அதற்கு இணையான கவிதையை..*/

    நல்ல ரசனை !!!


  5. Anbu Says:

    நல்லா இருக்கு மச்சான் கவிதைகள்..


  6. //இதயம் துடிப்பது நின்றால்
    எனக்கு மரணம் நிகழுமா தெரியாது
    உன்னை நினைப்பது நின்றால்
    மறுகணம் மரணம் நிகழும்!!//

    இதயத்தை பறிகொடுத்தவர்கள்

    பலருக்கு இவ்வரிகள் பிடிக்கும் லோகு

    எனக்கும் பிடித்தது...


  7. அனைத்தும் அருமை.

    //மணிக்கணக்கில் யோசித்தும்
    எழுத முடியவில்லை..
    லேசாய் தலைசாய்த்து
    ஓரக்கண்ணால் பார்ப்பாயே
    அதற்கு இணையான கவிதையை..

    *********
    இதயம் துடிப்பது நின்றால்
    எனக்கு மரணம் நிகழுமா தெரியாது
    உன்னை நினைப்பது நின்றால்
    மறுகணம் மரணம் நிகழும்//

    இவை இரண்டும் இனிமை.

    //நீதான் அழகி என்று
    கர்வம் கொள்ளாதே!
    உன்னை ஜெயிக்க பிறப்பாள்
    நம் மகள்!!//

    இதற்கே நான் கொடுப்பேன் முதன்மை.

    வாழ்த்துக்கள் லோகு.


  8. சூப்பர் லோகு,


  9. நன்றாக இருக்கிறது...


  10. கையெழுத்தே காதலைத் தூண்டுகிறது

    அன்பின் லோகு

    கவிதை அருமை அருமை

    ஓரக்கண் பார்வை - நெற்றி முடி ஒதுக்குதல் - மரணம் எப்போது - பட்டாம்பூச்சி - கண்ணாடி - பூனைக்குட்டி - சூபர்லேடிவ் - நச்சென்ற கடைசி வரிகள் - அழகியின் கர்வமடக்க பிறப்பாள் நம்மகள்

    அழகான கவிதை லோகநாதன்

    வயதுக்கேற்ற கவிதை - வாழ்வினில் வெற்றி பெற நல்வாழ்த்துகள்


  11. நீதான் அழகி என்று
    கர்வம் கொள்ளாதே!
    உன்னை ஜெயிக்க பிறப்பாள்
    நம் மகள்!!

    அடிச்சு பின்னுரிங்க லோகு...
    உண்மையில் இந்த வார்த்தைகளை நான் உபயோகப்படுத்தியிருக்கிறேன்.
    ஹிஹி...


  12. லோகு Says:

    /நையாண்டி நைனா said...

    மச்சி... நல்லா இருக்கியா மச்சி....
    எனக்கு வேலை கொடுத்திருக்கே.... நீ நல்லா இரு.//

    நல்லா இருக்கேன் மாப்ள.. நன்றி..


  13. லோகு Says:

    /துஷ்யந்தன்
    பிரான்ஸ்.

    ((((( நீ பிடிக்கும் போது மட்டும்
    தானாக வந்து சிக்கி கொள்கின்றன
    பட்டாம் பூச்சிகள்..)))))

    சும்மா நச்சுனு இருக்கு தல...//

    நன்றி நண்பா..


  14. லோகு Says:

    // Ram said...

    /*மணிக்கணக்கில் யோசித்தும்
    எழுத முடியவில்லை..
    லேசாய் தலைசாய்த்து
    ஓரக்கண்ணால் பார்ப்பாயே
    அதற்கு இணையான கவிதையை..*/

    நல்ல ரசனை !!!//

    நன்றி ராம்.. அடிக்கடி வாங்க..


  15. லோகு Says:

    // Anbu said...

    நல்லா இருக்கு மச்சான் கவிதைகள்..//

    நன்றி மாப்ள..


  16. லோகு Says:

    //பிரியமுடன்.........வசந்த் said...

    //இதயம் துடிப்பது நின்றால்
    எனக்கு மரணம் நிகழுமா தெரியாது
    உன்னை நினைப்பது நின்றால்
    மறுகணம் மரணம் நிகழும்!!//

    இதயத்தை பறிகொடுத்தவர்கள்

    பலருக்கு இவ்வரிகள் பிடிக்கும் லோகு

    எனக்கும் பிடித்தது...//

    அப்படியா சங்கதி.. வாழ்த்துக்கள்..


  17. லோகு Says:

    //துபாய் ராஜா said...

    அனைத்தும் அருமை.

    //மணிக்கணக்கில் யோசித்தும்
    எழுத முடியவில்லை..
    லேசாய் தலைசாய்த்து
    ஓரக்கண்ணால் பார்ப்பாயே
    அதற்கு இணையான கவிதையை..

    *********
    இதயம் துடிப்பது நின்றால்
    எனக்கு மரணம் நிகழுமா தெரியாது
    உன்னை நினைப்பது நின்றால்
    மறுகணம் மரணம் நிகழும்//

    இவை இரண்டும் இனிமை.

    //நீதான் அழகி என்று
    கர்வம் கொள்ளாதே!
    உன்னை ஜெயிக்க பிறப்பாள்
    நம் மகள்!!//

    இதற்கே நான் கொடுப்பேன் முதன்மை.

    வாழ்த்துக்கள் லோகு.//

    நன்றி ராஜா அண்ணா..


  18. லோகு Says:

    // பீர் | Peer said...

    சூப்பர் லோகு,//

    nandri Peer Anna..


  19. லோகு Says:

    // அமுதா கிருஷ்ணா said...

    நன்றாக இருக்கிறது...//

    நன்றி... அடிக்கடி வாங்க..


  20. லோகு Says:

    //cheena (சீனா) said...

    கையெழுத்தே காதலைத் தூண்டுகிறது

    அன்பின் லோகு

    கவிதை அருமை அருமை

    ஓரக்கண் பார்வை - நெற்றி முடி ஒதுக்குதல் - மரணம் எப்போது - பட்டாம்பூச்சி - கண்ணாடி - பூனைக்குட்டி - சூபர்லேடிவ் - நச்சென்ற கடைசி வரிகள் - அழகியின் கர்வமடக்க பிறப்பாள் நம்மகள்

    அழகான கவிதை லோகநாதன்

    வயதுக்கேற்ற கவிதை - வாழ்வினில் வெற்றி பெற நல்வாழ்த்துகள்//

    விரிவான அலசலுக்கும், வாழ்த்துக்கும் நன்றி அய்யா..


  21. லோகு Says:

    //முரளிகுமார் பத்மநாபன் said...

    நீதான் அழகி என்று
    கர்வம் கொள்ளாதே!
    உன்னை ஜெயிக்க பிறப்பாள்
    நம் மகள்!!

    அடிச்சு பின்னுரிங்க லோகு...
    உண்மையில் இந்த வார்த்தைகளை நான் உபயோகப்படுத்தியிருக்கிறேன்.
    ஹிஹி...//


    நன்றி முரளி அண்ணா..