காதல் இலர் தினம்.....

காதலருக்கு
தினம் தினம்.

காதல் இலருக்கு
ஒரு தினம்.
--------------------------------

கண்களின்
புணர்ச்சியில்
கருக்கொண்டது
காதல்.
-------------------------------------

காதல்
செய்த பாவம்
கல்யாணம்
செய்தால் போகும்
-----------------------------------
எவர் அறிவார் எவர் அறிவார்
காதல் வரும் நேரம்
காலன் வரும் நேரம்
எவர் அறிவார் எவர் அறிவார்
---------------------------
கண்ணிருந்தும் குருடராய்
காதிருந்தும் செவிடராய்
வாயிருந்தும் ஊமையராய்
காதல் இருந்தும் இல்லாமல்
கலியுக காதலர்.
19 Responses
 1. அழகான வரிகள்


 2. லோகு Says:

  //காதலருக்கு தினம் தினம்.
  காதல் இலருக்கு ஒரு தினம். //

  இது எப்படி?? உல்டாவாத்தானே வந்து இருக்கணும்..

  ********

  நல்லாருக்கு தலைவா.. கலக்கிட்டீங்க 3. superu... last lines romba nallaarukku.. =))


 4. nalla kaathal varikal. yaar arivaar enmanaiyum kaathalaiyum . eppadi ipaadi thonuthu ! vaalththukkal.


 5. ஓவரா பீல் பண்ணாதீங்க பாஸு!


 6. அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் .


 7. // சிநேகிதி said...
  அழகான வரிகள்//

  வரவிற்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி சிநேகிதி...


 8. // லோகு said...
  //காதலருக்கு தினம் தினம்.
  காதல் இலருக்கு ஒரு தினம். //

  இது எப்படி?? உல்டாவாத்தானே வந்து இருக்கணும்..//

  உண்மையான காதலருக்கு தனியாக தினம் ஏதும் தேவையில்லை. உள்ளத்தில் (உண்மையான) காதல் இல்லாதவர்க்குதான் இது போன்ற சம்பிராதயங்கள் எல்லாம் என்பதைத்தான்
  //காதலருக்கு தினம் தினம்.
  காதல் இலருக்கு ஒரு தினம். //

  என்று குறிப்பிட்டேன் தம்பி லோகு.

  ********

  /நல்லாருக்கு தலைவா.. கலக்கிட்டீங்க/

  எழுத தூண்டிய உங்களுக்குதான் நான் நன்றி சொல்லணும் லோகு.


 9. // இய‌ற்கை said...
  nice lines//

  வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி இயற்கை. ஆமா.. நீங்க இன்னும் பதிவுகள் ஆரம்பிக்கவில்லையா...


 10. // கலகலப்ரியா said...
  superu... last lines romba nallaarukku.. =)) //

  ரொம்ப ரொம்ப நன்றி ப்ரியா... :))


 11. // Madurai Saravanan said...
  nalla kaathal varikal. vaalththukkal.//

  வாங்க சரவணன், மதுரையும், மக்களும் சவுக்கியமா...

  //yaar arivaar enmanaiyum kaathalaiyum . eppadi ipaadi thonuthu ! //

  காதல் கொண்ட கணமே....
  கவிதை வருது தினமே... :))


 12. // ஆடுமாடு said...
  ஓவரா பீல் பண்ணாதீங்க பாஸு!//

  வாங்க,வாங்க ஆடுமாடு அண்ணாச்சி..

  ஓவர் ஃபீலிங்ஸ் உடம்பிற்கு ஆகாதுங்கிறது உண்மை தான்..
  இருந்தாலும் என்ன செய்ய ....
  காலம் செய்த கோலமிது... இது
  காதல் செய்த கோலமிது... :))


 13. //தியாவின் பேனா said...
  அருமையான பகிர்வு வாழ்த்துக்கள்.//

  வரவிற்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி தியாவின் பேனா ... 14. // SUREஷ் (பழனியிலிருந்து) said...
  கலி முத்திடுச்சி..,//

  காதலும் தான் தலைவரே.... :))


 15. கவிதைகள் ஒவ்வொன்றும் அருமை . வாழ்த்துக்கள் !


 16. Bogy.in Says:

  புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
  உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
  ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

  தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

  இவன்
  http://www.bogy.in


 17. அன்பின் ராஜா

  குறுங்கவிதைகள் - நல்லாவே இருக்கு

  நல்வாழ்த்துகள்