உதிரா(ர)க் காதல்..!

உறவுகளனைத்தும் உதிர்ந்து போதும்,
நீ மட்டும் மறக்க மறுக்கிறாய்
என் காதலெழுந்து தாண்டவமாட.
எனக்கு கடந்த காலமே இல்லையென
கண்ணீர் கொண்டு நுரை பொங்க
அழுத்தித் துடைத்தெறிந்தும்.

என் மனதைக் கொய்யும்
வாலிப வாசனைகளோடு
கூடிய நினைவுகளுடன்
நீ நகர்ந்து செல்கிறாய்.
மனச்சுவரின் குறுக்கே ஓடியோடி
ஒளிந்து விளையாடுகிறாய்.

விசாரணைகளின்றி நீ
கொடுத்த சொற் தண்டனைகளின்
பெயரில் ஏற்பட்ட வடுக்களில்
வலியெனும் குறுக்கு விசாரணைகள்
இன்றளவும் இருக்கின்றன.

வக்கீல் வேண்டாம் வாதாட,
என் காதல் உள்ளது.காலத்தின்
தீர்ப்பை வெல்ல..
உன்னுடையதையும்..!
-♠ராஜூ♠
11 Responses
  1. அருமை. வாழ்த்துக்கள்


  2. //வக்கீல் வேண்டாம் வாதாட,
    என் காதல் உள்ளது.காலத்தின்
    தீர்ப்பை வெல்ல..
    உன்னுடையதையும்..!//

    அருமை... வாழ்த்துக்கள்


  3. லோகு Says:

    //வக்கீல் வேண்டாம் வாதாட,
    என் காதல் உள்ளது.காலத்தின்
    தீர்ப்பை வெல்ல..
    உன்னுடையதையும்..!//

    ரொம்ப வாய்தா வாங்காம சீக்கிரமா கேஸை ஜெயிக்கற வழியை பாரு மாப்பு :)

    நல்ல கவிதை, வாழ்த்துக்கள்!


  4. என்னா பீலிங்கு?

    தலைப்பில் இன்னொரு ர தேவையில்லை..துணைக்காலை மட்டும் அடைப்புக்குறியில் போட்டாலே போதுமானது..


  5. Ashok D Says:

    :)

    உதிர்ந்த


  6. DREAMER Says:

    அருமை...

    -
    DREAMER


  7. vidivelli Says:

    very very nice......


  8. Raju Says:

    நன்றி சரவணன்,ரோஸ்விக்,லோகு, அஷோக், Dreamer,விடிவெள்ளி.

    @வெற்றி
    எல்லாத்துக்கும் அர்த்தம்ன்னு ஒன்னு இருக்கும்ண்ணே..!


  9. மற்றுமொரு நல்ல கவிதை..

    நன்றி..


  10. ராஜூ

    நல்லாவே இருக்கு - வெற்றி உனக்கு அண்ணனா - மதுரல எல்லாரும் அண்ணந்தானே


  11. Raju Says:

    நன்றி பிரகாஷ்..!

    நன்றி சீனாய்யா..! ஆனா, நீங்க மட்டும் தலைவர்.
    :-)